'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
ஒரு காலத்தில் டாப் வசூல் நடிகராக இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமை வரவே கூடாது. ஹிந்தித் திரையுலகத்தில் சில வருடங்களுக்கு முன்பு வரை தொடர்ந்து பல வெற்றிகளைக் கொடுத்தவர் அக்ஷய் குமார். ஆனால், கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விகளையே கொடுத்து வருகிறார். இது பாலிவுட்டிலும், ரசிகர்களிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2020ல் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்து வெளிவந்த 'காஞ்சனா' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'லட்சுமி' படத்தில் ஆரம்பமான இறங்குமுகம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. அதற்குப் பின் அக்ஷய் நடிப்பில் வந்த 12 படங்களில் 'சூர்யவன்ஷி, ஓ மை காட்' படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. 10 படங்கள் தோல்வியடைந்தது, சில படங்கள் படுதோல்வியடைந்தது. ஓடிடியில் வெளிவந்த 'அத்ராங்கி ரே' நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.
கடந்த மாதம் வெளியான 'சூரரைப் போற்று' ஹிந்தி ரீமேக் படுதோல்வியடைந்த நிலையில், கடந்த வாரம் வெளியான 'கேல் கேல் மெய்ன்' படமாவது ஓடிவிடும் என எதிர்பார்த்தார்கள். அந்தப் படமும் தோல்வியைத் தழுவியுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் 25 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அக்ஷயின் அடுத்த படமாக 'ஸ்கை போர்ஸ்' படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.