டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

முன்னணி நடிகரான அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா. சினிமாவில் நடிக்க விரும்பிய இவர் 'பட்டத்து யானை' படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானர். இந்த படம் வரவேற்பை பெறாத நிலையில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் மகள் நடிக்க அர்ஜூன் தமிழ், கன்னடத்தில் ஒரு படம் தயாரித்தார். இந்த படம் தமிழில் 'சொல்லிவிடவா' என்ற பெயரிலும், கன்னடத்தில் 'பிரேம பர்ஹா' என்ற பெயரிலும் வெளியானது. இந்த படமும் போதிய வரவேற்பை பெறவில்லை.
இதேபோல தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி 'அதாகப்பட்டது மக்களே' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் வரவேற்பை பெறவில்லை தொடர்ந்து திருமணம், தண்ணிவண்டி படங்களில் நடித்தார். அதுவும் கைகொடுக்கவில்லை. மகனுக்காக தம்பி ராமய்யா தயாரித்து இயக்கிய படம் 'மணியார் குடும்பம்'. இதுவும் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில்தான் உமாபதியும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்தாலும் இவருக்குள்ளும் இருக்கும் நடிப்பு ஆசை முடியவில்லை. இதனால் தற்போது இருவரையும் ஜோடியாக நடிக்க வைத்து ஒரு படத்தை தயாரித்து இயக்க அர்ஜூன் முடிவு செய்திருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தை அர்ஜூன் தயாரிக்க மட்டுமே செய்கிறார், இயக்குவது ஒரு அறிமுக இளம் இயக்குனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அர்ஜூன் தற்போது தனது சகோதரி மகன் துருவா சார்ஜா நடித்துள்ள பான் இந்தியா படமான 'மார்ட்டின்'-னுக்கு கதை எழுதி உள்ளார். இதை ஏபி அர்ஜூன் என்பவர் இயக்கி உள்ளார். அக்., 11ல் படம் ரிலீஸாகிறது.




