ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
உத்தர பிரதேசத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் பியா பாஜ்பாய். ஏ.எல்.விஜயின் முதல் படமான 'பொய்சொல்லப் போறோம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு ஏகன், கோவா, பலே பாண்டியா, கோ, சட்டம் ஒரு இருட்டரை இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக 2018ம் ஆண்டு வெளியான 'அபியும் அனுவும்' படத்தில் நடித்தார்.
பெரிய வாய்ப்புகள் இன்றி இருந்த பியா பாஜ்பாய் தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு 'மாயன்' படத்தின் மூலம் திரும்பி வருகிறார். இந்த படத்தில் பிந்து மாதவி, பிரியங்கா மோகன் ஆகியோருடன் 3வது நாயகியாக பியா நடிக்கிறார். ஜெ.ராஜேஷ் கண்ணா எழுதி, இயக்கி இருக்கும் இந்த படத்தை பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, கஞ்சா கருப்பு, ராஜ சிம்மன், ஶ்ரீ ரஞ்சனி, ரஞ்சனா நாச்சியார், கே.கே. மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்துள்ளார். கே.அருண் பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். இரண்டு பாகமாக வெளிவரும் இந்த படம் பேண்டசி த்ரில்லர் படமாக உருவாகிறது.