தனுஷ் இயக்கும் படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ் | துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா | 5 வருஷம் கழிச்சு ரொமான்டிக் படம் எடுப்பேன் : லோகேஷ் கனகராஜ் தகவல் | 20 ஆண்டுகளுக்குப் பின் காமெடி ஹாரர் படத்தில் இணையும் பிரபுதேவா - வடிவேலு | மகன்களின் கையால் ஊழியர்களுக்கு விஜயதசமி பரிசளித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | காப்பிரைட் பிரச்னை தீராமல் ரிலீஸ் செய்யக்கூடாது : மோகன்லால் பரோஸ் படம் மீது வழக்கு | நடிகையின் புகார் எதிரொலி : லப்பர் பந்து நாயகி மீது கேரள போலீசார் வழக்கு | விசாரணைக்கு ஒத்துழைக்க அடம்பிடிக்கும் நடிகர் சித்திக் : விரைவில் கைதாக வாய்ப்பு | பிரச்னையிலிருந்து வெளிவர பிசாசு நடிகைக்கு உதவிய வேட்டையன் வில்லன் நடிகர் | அந்தரங்க லீக் வீடியோவுக்கு தில்லாக பதில் அளித்த ஓவியா |
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'தங்கலான்' இன்று(ஆக., 15) வெளியாகி உள்ளது. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஞ்சித் இயக்கி உள்ளார். இந்த படத்தின் இறுதி புரமோசன் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் விக்ரம் பேசியதாவது: தங்கலான் படத்தின் முதல் புகைப்படம் வெளியானதிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது. படத்தை நிறைவு செய்வதற்கான ஊக்கத்தையும் அளித்தது.
'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட போது ஆயிரம் ஆண்டிற்கு முன்னதான தமிழகத்தின் வரலாறு தொடர்பான கதை. அரசர்கள, ஆடம்பரம், வீரம், வெற்றி, தோல்வி, போர் ஆகியவற்றை பற்றி பேசி இருந்தார்கள். ஆனால் தற்போது அதே இந்தியாவில் சில நூற்றாண்டுகளுக்கு முன் நாம் அனைவரும் வறுமையில் இருந்தோம். கஷ்டப்பட்டோம். இது வேறு உலகம். இதை மையமாக வைத்து ரஞ்சித் உருவாக்கிய கதைதான் தங்கலான்.
இந்தப் படத்தை ஜனரஞ்சகமாக உருவாக்கி இருக்கிறோம். மக்களை மனதில் வைத்து இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருது பெறும் கலை படைப்புகள் போல் அல்லாமல் இந்த படத்திற்கு முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் ஒரு ஆற்றல் வாய்ந்த படைப்பை உருவாக்கி உள்ளனர்.
படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அனைவரும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இசை அமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷுக்கு பிரத்யேகமாக நன்றி. இந்தப் படத்தில் அவருடைய கடின உழைப்பிற்காக சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க விருதை பெறுவார் என உறுதியாக நம்புகிறேன்.
இந்தப் படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள் என சொல்கிறார்கள். ஆனால் இது ஒரு கூட்டு முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் டேனியல் நம்ம ஊர் கலைஞர்களை போல் மாறிவிட்டார். அவருடைய எனர்ஜி பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பயணிக்கும் போது ரசிகர்களை சந்திக்கும் போது அவரது பேச்சு உற்சாகமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை இந்தப் படம் அதை போன்றது, இதைப் போன்றது, என்று சொல்வார்கள். ஆனால் இது வேற மாதிரியான படம் என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன்.
இவ்வாறு விக்ரம் பேசினார்.