''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும், ரஜினிகாந்தும் 25 படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள். ரஜினிகாந்த் கமர்ஷியல் ஹீரோவாக உருவாவதற்கு எஸ்.பி.முத்துராமன் பெரிய காரணமாக இருந்தார். ஒரு நாள் எஸ்.பி.முத்துராமனை ரஜினி அழைத்து “என்னுடைய வளர்ச்சிக்கு பெரிய துணையா இருந்தீங்க. நான் பொருளாதாரத்துல பெரிய அளவிற்கு முன்னுக்கு வந்து விட்டேன். ஆனால் நீங்க இன்னும் அப்படியேதான் இருக்கீங்க உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு ஆசைப்படுறேன். என்ன வேணுமோ கேளுங்க” என்றார்.
அதற்கு எஸ்.பி.முத்துராமன் “என்னோட முதல் படத்துலேருந்து கடைசி படம் வரைக்கும் என்னோடு ஒரே டீம்தான் வேலை செய்றாங்க. என்னை மாதிரிதான் அவுங்களும் இருக்காங்க. அப்படி நீங்க ஏதாவது செய்றதாக இருந்தா என்னோட டீமுக்கே செய்யணும்” என்றார். அதை ஏற்றுக் கொண்ட ரஜினி, எஸ்.பி.முத்துராமன் குழுவிற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த படம்தான் 'பாண்டியன்'.
இந்த படத்தின் லாபம், எஸ்.பி.முத்துராமனின் குழுவினருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் இதனால் சொந்த வீடு, அடிப்படை வாழ்வாதாரம் கிடைத்தது.