பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'கோட்'. விஜய் அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் விஜய்யுடன் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, அர்ஜூன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் இசை அமைத்துள்ளார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. செப்டம்பர் 5ம் தேதி படம் வெளிவருகிறது.
இந்த நிலையில் படத்தின் கதை பற்றி வெங்கட் பிரபு வெளிப்படையாக பேசி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவத்தின் உளவு அமைப்பான 'ரா' வின் துணை அமைப்பு 'சாட்ஸ்', அதாவது சிறப்பு தீவிரவாத எதிர்ப்பு படை. இந்த அமைப்பு ரா அமைப்போடு இணைந்து பணியாற்றும்.
இந்த அமைப்பில் பணியாற்றிய ஒரு குழு ஒரு காலத்தில் செய்த ஒரு விஷயம் தற்போது அவர்களுக்கு பிரச்னையாக வந்து நிற்கிறது. அதை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை. பரபரப்பான ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. ஒரு பெஸ்டிவல் மூடில் படம் இருக்கும், வழக்கமான விஜய்யை வேறு மாதிரி ரசித்து பார்க்கிற மாதிரி இருக்கும்.
இவ்வாறு கூறியுள்ளார் வெங்கட் பிரபு.