பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி | ‛தி கோட்' - ஜீவனுக்கு முதலில் உருவாக்கிய விஜய்யின் தோற்றம் வைரல் | ரஜினி உடன் மட்டும் வந்த கிசு கிசு : நடிகை லதாவே அளித்த பதில் | வேட்டையன் மூலம் மீண்டும் வெளிச்சம் பெறுவாரா ரக்ஷன் ? | அடுத்தடுத்த துயரங்களில் குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு மம்முட்டி ஆறுதல் | டொவினோ தாமஸ் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் மீது மலையாள நடிகை தாக்கு | இயக்குனர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காசி இயக்குனர் | மின்னல் முரளி கதாபாத்திரங்களை பயன்படுத்த நீதிமன்றம் தடை | சசிகுமாரை அடித்து கொடுமைப்படுத்திய இயக்குனர் | இசை ஆல்பத்தில் நடித்த நிஹாரிகா |
விக்ரம் நடிப்பில் எதிர்பார்க்கப்படும் படம் 'தங்கலான்'. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். ஞானவேல் ராஜா படத்தை தயாரித்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ளது.
விக்ரம் கேரியரில் இந்த படம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போன நிலையில் தற்போது ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட உள்ளனர்.
தங்கலான் பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மதுரை வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் மாளவிகா மோகனன் கூறியதாவது: தனிப்பட்ட முறையில் மதுரை ரொம்ப பிடிக்கும். இந்தியாவிலேயே மிகச்சிறந்த உணவு வகைகள் மதுரையில் தான் இருக்கிறது. கறிதோசை, ஜிகர்தண்டா என இங்குள்ள உணவு வகைகள் ரொம்ப பிடிக்கும். உண்மையான உணவு வகைகளை சுவைக்க வேண்டும் என்றால் மதுரைக்குதான் வரவேண்டும். மதுரையில் ஆரம்பித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.