பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

த.வெ.க., சார்பில் மதுரையில் ஆகஸ்ட் 21ல் மாநாடு நடத்துகிறார் விஜய். விக்கிரவாண்டிக்குபின் நடக்கும் 2வது மாநாடு என்றாலும் மதுரையில் நடப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மாநாட்டில் சில திரையுலக பிரபலங்கள் தவெகவில் சேரலாம். விஜய் முன்பு சிலரை இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல். ஆனால், ஒரு சிலர் இதை மறுக்கிறார்கள்.
இது உண்மையா என்று விசாரித்தால், 'தவெகவில் சேர ஆசை இருந்தாலும் பல நடிகர், நடிகைகள் தயங்குகிறார்களாம். காரணம், சட்டசபை தேர்தலில் அவர் தனித்து நிற்கிறார். அவர் கட்சியில் சேர்ந்தால் மத்திய அரசு, மாநில அரசை விமர்சிக்க வேண்டும். இதுவே தொழில் ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தும். புதுகட்சி என்பதால் விஜய் தரப்பில் பிரச்சாரம் சமயத்தில் பணம் தருவார்களா? என தெரியாது. இதனால் மார்க்கெட் இழந்த பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் யோசிக்கிறார்கள். விஜய் நண்பர்கள் வட்டாரத்தில் இருப்பவர்கள் கூட நட்பு வேறு, அரசியல் வேறு, நாம் தவெகவில் சேர வேண்டாம் என யோசிக்கிறார்களாம்.
விஜய் உடன் நடித்த அந்த பிரபல ஹீரோயின், மதுரை மாநாட்டில் கட்சியில் சேர வாய்ப்பு இருப்பதாகவும், அவருக்கு பதவி தரப்பட உள்ளது என்று பேச்சு எழுந்தாலும், எனக்கு அரசியல் தெரியாது என்று நடிகை தரப்பு மறுக்கிறதாம். அவரை கட்சியில் சேர்ந்தால் தேவையில்லாத விமர்சனங்களும் வரும் என்பதால் கட்சிக்குள்ளும் சிலர் பதறுகிறார்களாம். அதனால், மதுரை மாநாட்டில் கலையுலகினர் சேர வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.