சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

நடிகர் விஷால், தனுஷ் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு, ஆக.,16 முதல் புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்தது. இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று (ஆக.,11) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: இது மாதம் மாதம் நடக்கும் செயற்குழு கூட்டம் தான். படப்பிடிப்பை நிறுத்துவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்போம். அவர்களுடன் எங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. இவ்வாறு கூறினர்.