பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் |
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள தங்கலான் படம் ஆக., 15ல் ரிலீஸாகிறது. கேஜிஎப் பின்னணியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை பின்னணியாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள், டிரைலர் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பல்வேறு ஊர்களில் புரமோஷன் செய்து வருகிறார்கள். பார்வதி கூறுகையில், ‛‛படத்தில் நடிப்பதே ஆசீர்வாதம் தான். பணம் கிடைத்தாலும் அதைவிட ரசிகர்களின் ஆதரவு பெரியது. அவர்களின் அன்பு தான் எங்களை மேலும் மேலும் உழைக்க வைக்கிறது. இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. அதற்கு நான் 100 சதவீதம் கியாரன்டி தருகிறேன்'' என்றார்.