என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கனா, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் இணை இயக்குநர் மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் 'லப்பர் பந்து'. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் என இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ண மூர்த்தியும் நடிக்கின்றனர். இவர்களுடன் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும் ரிலீஸ் செய்யாமல் வைத்திருந்தனர். இந்த நிலையில் இத் திரைப்படத்தை வருகின்ற செப்டம்பர் மாதம் 20ம் தேதி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.