ரீல்ஸ் பிரபலங்கள், ரியலில் திணறுகிறார்கள் : வடிவுக்கரசி ஆதங்கம் | ஜன.,9ல் ரிலீசாகிறது 'ஜனநாயகன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | முன்பதிவில் மட்டுமே 58 கோடி வசூலித்த 'எல் 2 எம்புரான்' | கஜினி 2 பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | டியர் ஸ்டூடன்ட்ஸ் படப்பிடிப்பு முடிந்தது | பிரபாஸிற்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி? | ''இந்த மாதிரி படம் எடுங்க.. ஜெயிக்கலாம்'': வெற்றி சூத்திரம் சொன்ன பாக்யராஜ் | 'குபேரா' இயக்குவதில் பெருமை : சேகர் கம்முலா | என் ஹார்ட் டிஸ்கை தாங்க.... : பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம் | விஜய்யின் 'ஜனநாயகன்' : முக்கிய அறிவிப்பு |
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக தயாராகி உள்ளது. அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடித்திருக்கும் இந்த படம் ஓடிடியில் 30 மொழிகளில் வெளியாக உள்ளது.
சரித்திர காலம் மற்றும் நிகழ்காலம் என இரண்டு விதமான காலகட்ட கதையில் உருவாகி இருக்கும் இந்த கங்குவா படத்தின் டிரைலர் வருகிற 12ம் தேதி வெளியாக இருப்பதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இப்படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபிதியோல் ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கே.எஸ் .ரவிக்குமார் என பலர் நடிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.