அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'. இப்படத்தின் மூன்றாவது சிங்கிளாக 'ஸ்பார்க்' பாடல் நேற்று மாலை வெளியானது.
ஒரு அதிரடியான பாடலாக இருக்கும் என எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு இந்தப் பாடல் கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அவர்களில் பலர் அனிருத் ரசிகர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. சமீபகாலங்களில் விஜய் - அனிருத் கூட்டணி 'குத்து' பாடல்களாக களமிறக்கி டிரெண்டிங்கில் இருந்தது.
இருந்தாலும் யுவன் ரசிகர்கள் பாடல் நன்றாகத்தான் இருக்கிறது என பதிலுக்கு கமெண்ட் போட்டு வருகிறார்கள். படத்துடன் சேர்ந்து பார்க்கும் போது இந்தப் பாடல்கள் விஜய்யின் நடனத்துடன் இன்னும் ரசிக்க வைக்கும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். கலவையான விமர்சனங்களுக்கிடையில் 42 லட்சம் பார்வைகளை இந்தப் பாடல் கடந்துள்ளது. டிரெண்டிங்கிலும் நம்பர் 1 இடத்தில்தான் உள்ளது.
அதே சமயம், மற்றொரு பக்கம் விஜய்யின் தோற்றத்தைப் பற்றியும் ஒரு குரூப் 'டிரோல்' செய்து வருகிறது.