வேட்டையன் மூலம் மீண்டும் வெளிச்சம் பெறுவாரா ரக்ஷன் ? | அடுத்தடுத்த துயரங்களில் குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு மம்முட்டி ஆறுதல் | டொவினோ தாமஸ் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் மீது மலையாள நடிகை தாக்கு | இயக்குனர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காசி இயக்குனர் | மின்னல் முரளி கதாபாத்திரங்களை பயன்படுத்த நீதிமன்றம் தடை | சசிகுமாரை அடித்து கொடுமைப்படுத்திய இயக்குனர் | இசை ஆல்பத்தில் நடித்த நிஹாரிகா | திரைக்கதை ஆசிரியரான நடிகை | இயக்குனர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் கல்வி நிதி வழங்கும் ஐஸ்வர்யா | நடிகைகள் பற்றி அவதூறு : யு-டியூப்பர் காந்தராஜ் மீது ரோகிணி புகார் |
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சிரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் அங்கு நடந்து வருகின்றன. இந்நிலையில் மலையாள நடிகரும், ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலுமான மோகன்லால் வயநாடு, மேப்பாடி உள்ளிட்ட பகுதியில் ராணுவ சீருடையில் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
அவர் கூறுகையில் ‛‛இந்தியா சந்தித்த பேரிழப்புகளில் இதுவும் ஒன்று. எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் மக்கள் இன்னும் சிக்கி இருக்கிறார்களா என தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் நன்றி. இழந்ததை திரும்ப பெற முடியாது. ஆனால் இந்த மக்களின் எதிர்காலத்திற்கு உதவலாம்'' என்றவர் தனது விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலம் ரூ.3 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.