வேட்டையன் மூலம் மீண்டும் வெளிச்சம் பெறுவாரா ரக்ஷன் ? | அடுத்தடுத்த துயரங்களில் குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு மம்முட்டி ஆறுதல் | டொவினோ தாமஸ் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் மீது மலையாள நடிகை தாக்கு | இயக்குனர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காசி இயக்குனர் | மின்னல் முரளி கதாபாத்திரங்களை பயன்படுத்த நீதிமன்றம் தடை | சசிகுமாரை அடித்து கொடுமைப்படுத்திய இயக்குனர் | இசை ஆல்பத்தில் நடித்த நிஹாரிகா | திரைக்கதை ஆசிரியரான நடிகை | இயக்குனர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் கல்வி நிதி வழங்கும் ஐஸ்வர்யா | நடிகைகள் பற்றி அவதூறு : யு-டியூப்பர் காந்தராஜ் மீது ரோகிணி புகார் |
இளம் அறிமுக நடிகைகளுக்கு போட்டியாக இப்போதும் களத்தில் நிற்கிறார் திரிஷா. விடாமுயற்சி, தக் லைப், மலையாளத்தில் ராம், ஐடன்டட்டி, தெலுங்கில் 'விஸ்வம்பரா' என பிசியாக இருக்கிறார். இதற்கு இடையில் திரிஷா நடித்துள்ள வெப் தொடர் 'பிருந்தா'. தெலுங்கில் தயாராகி உள்ள இந்த தொடர் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் இன்று(ஆக., 2) சோனி லிவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் திரிஷா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்தது பெரும் ஈர்ப்பாக இருந்தது. எந்தவொரு கதாபாத்திரமும் ஒரு சவாலே. ஆனால், இயக்குநரிடம் தெளிவு இருந்ததால் அனைத்து சிறப்பாகவே மாறியது. பிருந்தாவின் உடல் மொழி மற்றும் கேரக்டர் ஸ்கெட்ச் பற்றி விரிவாக விவாதித்தோம். அதன்பிறகு ஒத்திகை நடத்தி அதன் பிறகே நடித்தேன்.
இதற்கு முன்பு பல ஓடிடி வாய்ப்புகள் வந்தபோதும் அவற்றில் எனது கதாபாத்திரம் வலுவாக இல்லாததால் அதனை நான் ஒப்புக் கொள்ளவில்லை. மென்மையான கேரக்டர்களில் என்னை பார்த்து ரசித்த ரசிகர்கள் எனது போலீஸ் கேரக்டரை ஏற்றுக் கொள்ளவார்கள் என்று நம்புகிறேன். அதற்காக கடின உழைப்பையும், மெனக்கெடலையும் கொடுத்திருக்கிறேன்” என்கிறார் திரிஷா.
இந்த தொடரை சூர்யா மனோஜ் வாங்கலா எழுதி இயக்கியுள்ளார். சக்திகாந்த் கார்த்திக் இசை அமைத்துள்ளார். தினேஷ் பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். திரிஷாவுடன் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமணி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.