பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி | ‛தி கோட்' - ஜீவனுக்கு முதலில் உருவாக்கிய விஜய்யின் தோற்றம் வைரல் | ரஜினி உடன் மட்டும் வந்த கிசு கிசு : நடிகை லதாவே அளித்த பதில் | வேட்டையன் மூலம் மீண்டும் வெளிச்சம் பெறுவாரா ரக்ஷன் ? | அடுத்தடுத்த துயரங்களில் குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு மம்முட்டி ஆறுதல் | டொவினோ தாமஸ் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் மீது மலையாள நடிகை தாக்கு | இயக்குனர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காசி இயக்குனர் | மின்னல் முரளி கதாபாத்திரங்களை பயன்படுத்த நீதிமன்றம் தடை | சசிகுமாரை அடித்து கொடுமைப்படுத்திய இயக்குனர் | இசை ஆல்பத்தில் நடித்த நிஹாரிகா |
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ‛மழை பிடிக்காத மனிதன்'. சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த விஜய் மில்டனுக்கு பேரதிர்ச்சி இருந்துள்ளது. அது என்ன என்பதை அவரே வெளியிட்ட வீடியோ பதிவில், ‛‛இந்த படத்தின் ஹீரோ யார், எங்கிருந்து வந்துள்ளான், ரவுடியா, அடியாளா, டாக்டரா என பல கேள்விகள் வைத்து தான் படத்தை உருவாக்கி இருந்தேன். ஆனால் படம் பார்க்கும்போது எனக்கே அதிர்ச்சியாகிவிட்டது. படத்தின் துவக்கத்தில் எனக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சியை வைத்துள்ளனர். சென்சார் பண்ண ஒரு படத்தில் எப்படி இதுபோன்ற காட்சி வருகிறது. யார் இவர்களுக்கு இந்த உரிமையை தந்தது என தெரியவில்லை. அந்த ஒரு நிமிட காட்சியை மனதில் ஏற்றாமல் ரசிகர்கள் படத்தை பாருங்கள் என வேண்டுகோளாகவே வைக்கிறேன்'' என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.