மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி | 55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம் | பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் |

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் பிரேமி. 'உதிரிபூக்கள்' படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த பிரேமியை காதலித்தார் அந்த படத்தின் இயக்குனர் மகேந்திரன். அவர் ஏற்கெனவே திருமணமாவர் என்பதை அறிந்த பிறகும் அவர் மீதிருந்த உயர்ந்த மதிப்பின் காரணமாக காதலை தொடர்ந்தார் பிரேமி. அதன்பிறகு மகேந்திரன் இயக்கிய படங்கள் அனைத்திலும் ஏதோ ஒரு கேரக்டரில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் மகேந்திரன் படம் இயக்குவதை நிறுத்தியதும் அவருக்கு பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. இதனால் இரு குடும்பங்களை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தன்னோடு 7 வருடங்கள் வாழ்ந்து ஒரு குழந்தைக்கும் தாயான பிரேமியை கைவிட்டார் மகேந்திரன். அதன்பிறகு பிரேமி தனது உறவினர்கள் ஆதரவில் வாழ்ந்து மீண்டும் படங்களில் நடித்து தனது மகனை வளர்த்தெடுத்தார்.
மகேந்திரன் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது பல வருடங்களுக்கு பிறகு தனது மகனுடன் மகேந்திரனை சந்தித்தார் பிரேமி. தனது கடைசி காலத்தில் பிரேமியை பிரிந்ததை நினைத்து மகேந்திரன் நிறைய வருந்தியதாக சொல்வார்கள்.
இந்த தகவலை பிரேமியை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.