பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி | பிளாஷ்பேக் : விஜய் சேதுபதிக்கும் மூத்த வாத்தியார் ராஜேஷ் | பிளாஷ்பேக் : தமிழ் சினிமாவான பிரெஞ்ச் நாடகம் | எந்த சொத்து, எப்போது வாங்கினேன் என்பது தெரியாது : நீதிமன்றத்தில் இளையராஜா வாக்குமூலம் |
நடிகர்களின் சம்பளம் மற்றும் கால்ஷீட் பிரச்னை காரணமாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்குமான மோதல் அதிகரித்து வருகிறது. முன்பணம் வாங்கிக் கொண்டு தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் 16ம் தேதி முதல் புதிய படங்கள் தொடங்கப்படாது என்றும், நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து முழு வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகவும் திரைப்பட சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்தது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம், தனுஷ் மீது இதுவரை எந்த புகாரும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது. அதோடு தன்னிச்சையாக முடிவெடுப்பதா என்றும் கேட்டிருந்தது.
இந்த நிலையில் தயாரிப்பளார் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் “தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தனுஷ் மீது எந்த புகாரும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பானது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே தயாரிப்பாளர் சங்க பொதுகுழுவில் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் 5 நடிகர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது நடிகர் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் நடிகர் சங்கம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் சங்க உறுப்பினர்கள் நலன் காக்க நாங்களும் சில முடிவுகள் எடுக்க வேண்டியது வந்தது. நடிகர் சங்கம் தங்கள் உறுப்பினர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுப்பதை போலத்தான் எங்கள் உறுப்பினர்களின் நலன் காக்க ஏற்கனவே அறிவித்த நவ., 1 முதல் சினிமா ஸ்டிரைக் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளோம். இதற்கு நடிகர் சங்கம் தகுந்த ஒத்துழைப்பு தரும் என்ற நம்புகிறோம்”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.