எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு | பிளாஷ்பேக் : கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில் நடித்த சிவகுமார் | பிளஷ்பேக் : அன்று சிந்திய பாசம் | ஆக்ஷன் ஹீரோவான பிரஜின் | தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை : சீமா பிஸ்வாஸ் | ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'பெருசு' | ஓடிடியால் கூலி வெளியாவதில் சிக்கலா? | பிளாஷ்பேக்: வயது வந்தோருக்கான சான்றிதழ் பெற்று வெளிவந்த முதல் தமிழ்ப்படம் எம் ஜி ஆரின் “மர்மயோகி” | வீர தீர சூரன், எல் 2 : எம்புரான் தியேட்டரில் போட்ட போட்டி |
டான் படத்தின் வெற்றி மூலம் கவனிக்கத்தக்க இயக்குனர் ஆனார் சிபி சக்கரவர்த்தி. இந்த படத்திற்கு பின் ரஜினி, நானி போன்ற முன்னணி நடிகர்களிடம் அடுத்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், இது எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இப்போது பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 24வது படத்தை இயக்கவுள்ளார் சிபி சக்கரவர்த்தி. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது இதில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளாராம். தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நாயகியாக நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் இப்போது அம்மா மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.