டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛தங்கலான்'. பா.ரஞ்சித் இயக்க, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் தமிழர்கள் வாழ்வை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. ஆக., 15ல் படம் ரிலீஸாக உள்ளது.
இப்படத்தின் நாயகிகளில் ஒருவரான மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் எக்ஸ் தளத்தில் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் விக்ரம் உடன் நடித்தது பற்றி கேட்டார். அதற்கு மாளவிகா, ‛‛முதன்முதலில் சண்டைக்காட்சியில் நடித்த படம் இது. நான் செய்த முட்டாள்தனத்தால் சங்கடமாக உணர்ந்தேன். ஆனால் விக்ரம் எனக்கு ஒத்துழைப்பு தந்தார். அவர் இல்லாத இந்தப் பயணத்தை கற்பனை செய்ய முடியவில்லை'' என்றார்.
மற்றொருவர் எப்போது உங்களுக்கு திருமணம் நடக்கும் என்று கேட்க, ‛‛திருமணமான பெண்ணாக என்னை பார்க்க ஏன் இவ்வளவு அவசரம்'' என்றார். இன்னொருவர் இதுவரை நீங்கள் நடிக்காத எந்த வேடத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்க, ‛கேங்ஸ்டராக நடிக்க ஆசை' என்றார்.