தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஹிந்தியில் வரவேற்பை பெற்ற ‛அந்தாதூன்' படம் தமிழில் ‛அந்தகன்' என்ற பெயரில் ரீ-மேக் ஆகி உள்ளது. பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ளார். வரும் ஆக., 15ல் படம் ரிலீஸ் என அறிவித்தனர். அந்தசமயம் விக்ரமின் ‛தங்கலான்', கீர்த்தி சுரேஷின் ‛ரகு தாத்தா' மற்றும் அருள்நிதியின் ‛டிமான்டி காலனி 2' ஆகிய படங்களின் வெளியீடும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நான்கு படங்களுக்கும் கணிசமான தியேட்டர் கிடைக்குமா என்ற சூழல் இருந்தது. இதனால் அந்தகன் ரிலீஸை ஆக., 9க்கு மாற்றிவிட்டனர்.
இந்த படத்தை புரமோஷன் செய்யும் விதமாக பல்வேறு தளங்களில் பேட்டி அளித்து வருகிறார் பிரசாந்த். அப்படித்தான் ஒரு யுடியூப் தளத்திற்கு ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டியபடி பேட்டி கொடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் தற்போது ஹெல்மெட் அணியாமல் அவர் பைக்கை ஓட்டியதால் சென்னை, பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் பிரசாந்த்திற்கு ரூ.2000 அபராதம் விதித்துள்ளனர்.