பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

இணைய, சமூக வலைத்தள உலகில் கடந்த சில நாட்களாக சில பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. யு டியுப் ஊடகங்கள் என்ற பெயரில் சிலர் அவதூறுகளைப் பரப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. தனி நபர் தாக்குதல்கள் அதிகமாக இருக்கிறது என்ற புகார்களும் உண்டு.
இதனிடையே, நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் இது குறித்து நீண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் எல் முருகன் ஆகியோருக்கும் தனது கோரிக்கைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள், நபர்கள் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசு ஆவன செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையை முடித்துள்ளார்.
அடுத்து சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார், தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் விஷ்ணு மஞ்சு இந்த பிரச்சனை குறித்து பேசியதை மேற்கோள் காட்டி, “தமிழ்நாட்டில் உள்ள நடிகர் சங்கம் எழுந்திருக்க வேண்டும். அரசு, உதயநிதியின் ஆதரவுடன் இது போன்ற பொய்யர்கள், யு டியுபர்கள் என அழைக்கப்படுவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனது நிலைக்கு இந்தத் திரையுலகமும் ஆதரவு தரும் என்று நம்புகிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.