ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக இருந்து நடிகர்களாக மாறியவர்களில் தற்போது பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பவர் எஸ்ஜே சூர்யா. 'வாலி, குஷி' என இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் அடுத்து சில படங்களை இயக்கினார். கடந்த பத்து வருடங்களாக படங்களை இயக்கவில்லை. ஆனால், நடிகராக மிகவும் பிஸியாக இருக்கிறார்.
எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்த சில முக்கிய படங்கள் சூப்பர் ஹிட்டாக ஓடி அவரை ராசியான ஒரு நடிகராகவும் மாற்றியுள்ளது. அதை மனதில் வைத்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஒரு 'லிஸ்ட்' போட்டு அவரைப் பாராட்டியிருக்கிறார்.
“எஸ்ஜே சூர்யா
மெர்சல், வாரிசு - விஜய்யின் உச்சம்
மாநாடு - எஸ்டிஆரின் உச்சம்
டான் - எஸ்கேயின் உச்சம்
மார்க் ஆண்டனி - விஷாலின் உச்சம்
ஜிகர்தண்டா 2 - லாரன்ஸின் உச்சம்
ராயன் - தனுஷின் உச்சம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு, “ப்ரோ… எனி வே….இறைவா..” என நன்றி தெரிவித்து பதிலளித்துள்ளார் எஸ்ஜே சூர்யா.