காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் படம் "கடைசி உலகப்போர்". இப்படத்தில் நாசர், நட்டி, அனகா, என். அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை டாப் ஹீரோக்களின் பாணியில் லண்டனில் வெளியிட்டுள்ளார் ஆதி. லண்டனில் புகழ்பெற்ற ஓவோ அரேனா வெம்பிலி அரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் இது வெளியிடப்பட்டது. அங்கு நடந்த தனது இசை கச்சேரியின் நடுவில் ரசிகர்களின் ஆரவாரங்களுக்கு இடையில் தனது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இந்த அரங்கில் ஒரு தமிழ் படத்தின் போஸ்டர் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.