'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'மகாராஜா'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து முதல் 100 கோடி வசூலித்த படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.
படத்தைப் பார்த்து ரசித்த நடிகர் விஜய், அதன் இயக்குனர் நித்திலன் சாமிநாதன், தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் ஆகியோரை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
இது குறித்து படத்தின் இயக்குனர் நித்திலன், “டியர் விஜய் அண்ணா, இந்த அறிவூட்டும் சந்திப்புக்கு நன்றி. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். 'மகாராஜா'வைப் பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னை பெருமைப்படுத்துகின்றன. அது எனக்கு ஒரு பெரிய பாராட்டு. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். லவ் யூ ணா. எனது தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜெகதீஷ் ஆகியோருக்கு நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் மேனேஜராக அவரது வலதுகரமாக இருக்கும் ஜெகதீஷ் 'மகாராஜா' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.