வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்: முத்துராமலிங்க தேவராக நடித்த நடிகர் புகார் | தமன்னா காட்சிகள் நீக்கம் தவிர்க்க முடியாதது: ராஜமவுலி விளக்கம் | மும்பையில் எதிரொலித்த கரூர் சம்பவம் | மகள் பெயரில் மகளிர் இசை குழுவை உருவாக்கும் இளையராஜா | பிளாஷ்பேக்: நாயகனாக தோல்வி அடைந்த கவுண்டமணி | பிளாஷ்பேக்: சிவாஜியுடன் பத்மினி சகோதரிகள் நடித்த படம் | ஆதீன இசைப்புலவர் விருது: இன்ப அதிர்ச்சியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா | 'தோசா கிங்' ஹீரோ யார்? சர்ச்சை கதை என்பதால் பலரும் தயக்கம் | 7 படங்களில் தேறியது 2 மட்டுமே: பூவையார் தரப்பு புலம்பல் | 21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' |

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இயக்கத்தில் கடந்த வாரம் ‛டீன்ஸ்' படம் வெளிவந்தது. சிறுவர்கள், சிறுமியர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் அது.
'இந்தியன் 2' வெளியான அதே நாளிலேயே 'டீன்ஸ்' படத்தை வெளியிட்டது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதோடு ஒரு யு டியூப் சேனலில் பார்த்திபன் பேசிய வீடியோ ஒன்றிற்கு '13 வேஷமும் நானே போடுறேன்னு சில முட்டாள் நடிகர்கள் இருக்காங்க,” என்று தலைப்பு போடப்பட்டிருந்தது.
அந்த ஸ்கிரீன்ஷாட்டைப் பலரும் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தினார்கள். இதற்கு முன்பு 'நவராத்திரி' படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களிலும், 'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் பத்து வேடங்களிலும் நடித்திருந்தனர். அவர்களைத்தான் பார்த்திபன் அப்படிப் பேசியுள்ளாரோ என்ற சந்தேகத்தில் பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வந்தன.
அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக பார்த்திபன், “நண்பர்களே! ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும், இயக்குனர்களையும் மதிப்புடன் உயர்ந்தேப் பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.