''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மெண்ட் சார்பில் ராம் மணிகண்டன் தயாரித்துள்ள படம் 'சதுர்'. அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ், தாமோதரன், செல்லா, 'ஜீவா' ரவி, சூர்யா, அர்னவ் ஹரிஜா, பிரதீப் அரி, கிரிஷ் பாலா, ஜெகன் கிரிஷ், உள்பட பலர் நடித்துள்ளனர். அகஸ்டின் பிரபு எழுதி இயக்கியுள்ளதோடு விஎப்எக்ஸ் பணியும் மேற்கொண்டுள்ளார். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தமிழ் மன்னர் ஒருவரால் கடலுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட ஒரு புதையலை தேடி இன்றைய இளைஞர்கள் செல்வது மாதிரியான கதை.
படம் பற்றி இயக்குனர் அகஸ்டின் பிரபு கூறும்போது “இப்படத்தில் 1,250 விஎப்எக்ஸ் ஷாட்டுகள் இருக்கிறது. தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைச் சொல்லி, தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்றேன். பிறகு பைலட் படத்தை உருவாக்கிக் காட்டினேன். உடனே அவர் என்னை முழுமையாக நம்பினார்.
கடலுக்குள் நடக்கும் காட்சி மற்றும் கார்சேஸ், பிளைட் பைட், ஹிஸ்டாரிக்கல் காட்சிகள் உள்பட பிரமிக்கத்தக்க காட்சிகள் நிறைய இருக்கிறது. சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு கதை தொடங்குகிறது. 1945, 1967 ஆகிய காலக்கட்டங்களில் நடந்து, இறுதியில் இன்றைய வருடத்தில் முடிகிறது. அனைத்து ரசிகர்களுக்கும் 'சதுர்' படம் புதிய அனுபவமாக இருக்கும். அடுத்தமாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.