'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்த 'விடுதலை' படம் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு அதன் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது. முதல் பாகத்தில் விடுதலை போராளியான வாத்தியார் விஜய் சேதுபதியை கான்ஸ்டபிள் சூரி கைது செய்வதோடு முடிந்தது. இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டரே பிரதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டடுள்ளது. அதோடு இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்றும், இதில் மஞ்சுவாரியரும், அனுராக் காஷ்யபும் இணைந்திருப்பதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'விடுதலை' இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப் மற்றும் பல நம்பிக்கைக்குரியவர்கள் நடித்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக, மஞ்சு வாரியரின் நடிப்பு இந்த படத்தில் ரசிகர்களால் பாராட்டப்படும். நடிகர் கிஷோரின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் தீவிரமானதாக இருக்கும்" என்றார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.