தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
தற்போது வலிமை படத்தை இயக்கி வரும் எச்.வினோத் இயக்கிய படம் சதுரங்க வேட்டை. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தயாரானது. அரவிந்த் சாமி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், , ராதா ரவி, நாசர், சாந்தினி, ஸ்ரீமன், மனோபாலா, குமரவேல், இ.ராமதாஸ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். எச். வினோத்தின் கதையை சலீம் படத்தை இயக்கிய நிர்மல்குமார் இயக்கி இருந்தார். காமெடி நடிகர் மனோபாலா தயாரித்திருந்தார்.
இந்த படம் பல பிரச்சினைகள் காரணமாக முடங்கி கிடந்தது. தற்போது இதனை ஆன்ஸ்கை டெக்னாலஜி என்ற நிறுவனத்தின் சார்பில் முத்து சம்பந்தம் வாங்கி வெளியிடுகிறார். இவர் தற்போது 2030 என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
படத்தை வெளியிடுவது தொடர்பாக அவர் கூறியதாவது: சதுரங்க வேட்டை இந்திய திரைத்துறையில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்று. இதன் இரண்டாம் பாகம் சதுரங்க வேட்டை 2 வெளிவருவதைப் பற்றி கேள்விப்பட்டபோது, மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் காட்சிகளை கண்டபிறகு, என்னுள் மிகப்பெரும் ஆர்வம் குடிகொண்டது.
எதிர்பாராத சூழ்நிலைகளால் படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து, நான் பெரிதும் ஏமாற்றமடைந்தேன். தற்போது சதுரங்க வேட்டை 2 படத்தை எங்கள் நிறுவனம் மூலம் வெளியிட முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். படத்தை வெளியிட ஏதுவாக பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் ஜனவரி 2022ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.