மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக் கொண்டு இருப்பவர் ரகுமான். தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் அவர் பாலிவுட்டின் பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான விகாஸ் பால் இயக்கும் கண்பத் என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகமாக வெளிவர இருக்கிறது.
விகாஷ் பால் குயின் , சில்லார் பார்ட்டி, சூப்பர் 30 போன்ற படங்களை இயக்கி மூன்று முறை தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் டைகர் ஷெராப், ரஹ்மான், க்ரிதி சநோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ரகுமான் கூறியதாவது: மூன்று மாத கால ஹிந்தி டியூசன், ஸ்கிரிப்ட் ரீடிங், மேக்கப் டெஸ்ட் என்று நிறைய ஹோம் வொர்க் செய்த பின் தான் லண்டனில் படப்பிடிப்புக்கு சென்றேன். பொதுவாகவே தென்னிந்திய நடிகர் - நடிகைகளை பாலிவுட் சினிமாக்காரர்கள் அவ்வளவாக மதிக்க மாட்டார்கள் என்று தான் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் நான் கேள்வி பட்டதுக்கு மாறாக இருந்தது.
அங்கு எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான அனுபவங்கள். அவர்களது நேரம் தவறாமை , பிளானிங் , எனக்கு கிடைத்த உபசரிப்பு, வரவேற்பு, காட்டிய அன்பு எல்லாமே என்னை ஆச்சர்யப்பட வைத்தது. குறிப்பாக பெரியவன், சிறியவன் பாகு பாடில்லாமல் நடிகர் டைகர் ஷெராப் மற்றும் நடிகர்களும் இயக்குனரும் புரொடக்க்ஷன் பாய் லைட் மேன் போன்றோர்களிடம் நண்பர்கள் போல பழகுவது என்னை ஆச்சாரியப்படுத்திய புதிய அனுபவமாகும்.
என்னுடன் நடித்த க்ரிதி சனோனும் பழகுவதற்கு மிக இனிமையானவர். படப்பிடிப்புக்கு சென்ற முதல் நாளிலேயே நீண்ட காலமாக மிகவும் பரிச்சயமானவரைபோல தான் என்னுடன் பழகினார். ஒவ்வொரு சீன் எடுக்கும் போதும் சார் அப்படி நடித்தால் நல்லா இருக்குமா, இந்த சீன்ல நம்ம இப்படி நடிக்கலாமா என்று அபிப்ராயம் கேட்பார் க்ரிதி.
சிறந்த எழுத்தாளரான இயக்குநர் விகாஸ் பால், தான் பெரிய இயக்குநர் என்ற எந்த வித பந்தாவும் இல்லாமல் அன்பாக பழகுவார். யாருடைய மனமும் நோகக்கூடாது என்ற மனபான்மையுடன் வேலை வாங்குவார். அவருடன் பழகினால் அவரை விட்டு பிரிய நமக்கு மனசு வராது என்கிறார் ரகுமான்.