2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதன்பிறகு, ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படங்களில் நடித்தார். என்றாலும் பெரிதாக அவரால் சாதிக்க முடியவில்லை. இதனால் சின்னத்திரை பக்கம் போனார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தார்.
இந்த நிலையில் மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் தமிழ் படமான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து ரம்யா பாண்டியன் கூறியிருப்பதாவது:
மம்முட்டி சார் நான் நடித்த ஜோக்கர் படத்தை பார்த்துள்ளார். அதில் எனது நடிப்பு பிடித்துவிடவே என்னை அவரது சொந்த படம் ஒன்றில் நடிக்க வைக்க விரும்பினார். அந்த படம் டிராப் ஆகிவிட்டது. அதனால் அதை மனதில் வைத்து இந்த படத்தில் நான் நடிக்க சிபாரிசு செய்துள்ளார். அதன்பிறகு இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும், அவரது குழுவினரும் ஜோக்கர் படத்தை பார்த்து விட்டு என்னை தேர்வு செய்தனர்.
முதல் மலையாள படம், குழுவினரும் அறிமுகமில்லாதவர்கள். முதல் இரு நாட்கள் தயக்கத்துடன் இருந்தேன். மம்முட்டி சார்தான் என்னிடம் தமிழில் சரளமாக பேசி எனது தயக்கத்தை போக்கினார். அவர் மிகவும் எளிமையான, இனிமையான, பணிவான மனிதர். மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
இவ்வாறு ரம்யா பாண்டியன் கூறியிருக்கிறார்.