அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் |

எச்.வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து சதுரங்க வேட்டை 2 படம் தயாரானது. முதல் பாகத்தை தயாரித்த மனோபாலாவே இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார். நிர்மல்குமார் என்பவர் இயக்கி உள்ளார். அரவிந்த்சாமி, த்ரிஷா, நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் நடித்துள்ளனர். படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எச் வினோத் எழுதியுள்ளார். அஸ்வின் வினாயகமூர்த்தி இசையமைத்துள்ளார்.
பல்வேறு காரணங்களால் இதன் வெளியீடு கடந்த 4 வருடங்களாக தாமதமாகி வருகிறது. மக்களை புத்திசாலித்தனமாக ஏமற்றுவதுதான் படத்தின் கதை களம். இரண்டாம் பாகமும் இதே களத்தில்தான் தயாராகி உள்ளது. படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் கதையை திருடி தெலுங்கில் 'கில்லாடி' என்ற படத்தை எடுத்துள்ளதாக தயாரிப்பாளர் கங்காதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: சதுரங்க வேட்டை 2 படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை ஐதராபாத்தில் உள்ள கிரண் ஸ்டூடியோ நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ் வர்மாவிற்கு 40 லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கிறேன். இந்த நிலையில் ஒப்பந்தத்திற்கு விரோதமாக சதுரங்க வேட்டை படத்தின் கதையை திருடி ரவி தேஜாவின் கிலாடி படத்தை கிரண் ஸ்டூடியோ நிறுவனம் எடுத்துள்ளது. எனவே படத்தை எந்தவொரு தளத்திலும் வெளியிட தடைவிதிக்க வேண்டும். என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். ஒரு வாரத்தில் கிரண் ஸ்டூடியோ நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தது.