சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | பொன்னியின் செல்வன் - குந்தவையாக த்ரிஷா | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை | போக்சோ சட்டத்தில் ‛கும்கி' நடிகர் கைது | சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்னை ; ராம்குமார், பிரபு மீது சகோதரிகள் வழக்கு | எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி : இளையராஜா | கோயம்புத்தூரில் உருவான கேசினோ | கடைசி விவசாயி படைத்த புதிய சாதனை |
சிம்பு, எஸ்.ஜே.ஆர்யா, கல்யாணி பிரியதர்ஷன் நடித்த மாநாடு படம் வெளியாகி 100 நாள் ஆகிறது. கோயம்பேடு ரோகினி தியேட்டரில் 100வது நாளை எட்டியுள்ளது. தற்போது தெலுங்கு, இந்தியில் ரீமேக் ஆகிறது. 100வது நாளையொட்டி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவன் நமக்கு எப்போதுமே சிறந்த மோட்டிவேட்டர். தயங்கி நிற்கும்போதெல்லாம் "துணிந்து இறங்கு" எனத் தட்டிக் கொடுப்பவர். துணிந்து இறங்கி செய்த படம் "மாநாடு". தன்னம்பிக்கையின் உச்சமாய் நூறாவது நாளைத் தொட்டிருக்கிறது.
சமீபகாலமாக 100வது நாள் கடலில் போட்ட பெருங்காயமாய் கரைந்தே போய்விட்டது. ஆனால், நான்கு நாட்களில் திரையரங்கிலிருந்து படத்தை துரத்திவிடும் இந்நாட்களில் "மாநாடு" தரமான வெற்றியை, மகிழ்ச்சியை தமிழ் சினிமாவோடு பகிர்ந்திருக்கிறது.
வெற்றி என்பது சாதாரணமல்ல. பல நல்ல உள்ளங்களின் கூட்டு உழைப்பு. இப்படம் 100 நாட்களைத் தொடக் காரணமான இயக்குநர் வெங்கட் பிரபு, சிலம்பரசன் டி.ஆர், எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் எஸ் ஏ சி, வாகை சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன், பிரேம்ஜி, உதயா, மஹத், அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், பஞ்சு சுப்பு, மனோஜ் கே பாரதி, அரவிந்த் ஆகாஷ், டேனி உட்பட்ட அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், யுவன் ஷங்கர் ராஜா, ரிச்சர்ட் எம்.நாதன், கே.எல்.பிரவீன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரின் ஒத்துழைப்பால் மாநாடு நூறு நாட்களைத் தொட்டுள்ளது. இதயம் முழுக்க மகிழ்வுடன் இவ்வெற்றியை என் தாய் தந்தையருக்கு சமர்ப்பிக்கிறேன். என்றார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.