தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தமிழ் சினிமா துறையில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் என்ற அமைப்பும், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கம் என்ற அமைப்பும் செயல்பட்டு வருகிறது.
இதில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சிலர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தை சார்ந்த உறுப்பினர்கள் பணியாற்றும் படபிடிப்பு தளங்களுக்கு சென்று ரெய்டு என்கிற பெயரில் பணி வாய்ப்பை தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வீ.பாபு தொழிலாளர் நலத்துறை இணை ஆணையரிடம் புகார் அளித்தார். இதை தொடர்ந்து இரு சங்க நிர்வாகிளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது.
இதன் முடிவில் ஒரு சங்க உறுப்பினர்களின் பணியை மற்றொரு சங்கத்தினர் தடுக்கவோ, இடையூறு செய்யவோ கூடாது என இரு சங்கத்திடமும் கடிதம் பெறப்பட்டு பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர் சங்க பொதுச் செயலாளர் வீ.பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.