சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‛இந்தியன் 2'. 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் படம் வெளியான பின்னர் பலரும் ஏமாற்றம் அடைந்ததாக கருத்து பதிவிட்டனர். குறிப்பாக படத்தின் நீளம் அதிகமாக உள்ளது என குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்பட்டது. இதனால் இந்தியன் 2 படத்தின் காட்சிகள் 20 நிமிடம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியன் 2 படம் மூன்று மணிநேரம் ஓடக்கூடியதாக இருந்தது. தற்போது 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் 2 மணிநேரம் 48 நிமிடங்களாக இனி திரையரங்குகளில் ஓடும். இனியாவது படத்திற்கான நெகட்டிவ் விமர்சனங்கள் குறைந்து படம் ரசிகர்களை கவருமா காத்திருக்கலாம்.