இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
நம்மை மகிழ்விப்பதற்காக எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒரு பொழுதுபோக்குதானே என்று சொல்பவர்கள்தான் அதிகம். சினிமா படப்பிடிப்புகளிலும் 'ரிஸ்க்'குகள் அதிகம் என்பது அதில் பணிபுரிபவர்களுக்கும், அதனுடன் தொடர்புடையவர்களுக்கும்தான் அதிகம் தெரியும்.
ஸ்டுடியோவில் 20 அடி உயரத்தில் தான் லைட்டுகள் கட்டப்பட்டிருக்கும். அதிக பவர் கொண்ட மின்சார விளக்குகள் அருகில் நின்று கொண்டுதான் லைட்மேன்கள் வேலை செய்வார்கள். சண்டைக் காட்சிகள் என்றால் கேட்க வேண்டாம். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முன்பெல்லாம் பாதுகாப்பு உபகரணங்கள் குறைவாக இருந்தன. இருந்தாலும் கவனத்துடன் பணியாற்றினாலும் சில விபத்துகள் நிகழ்ந்த வரலாறு உண்டு. அதில் சில இறப்பு வரை போய்விடும். சில ஸ்டன்ட் கலைஞர்கள் இதற்கு முன்பும் இறந்து போய் இருக்கிறார்கள்.
கடைசியாக 'இந்தியன் 2' படப்பிடிப்பின் போது மிக உயரமான கிரேன் விழுந்து அதனால் படப்பிடிப்பில் பணியாற்றி வந்த மூவர் உயிரிழந்தார்கள். உதவி இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ், செட் உதவியாளர் சந்திரன் ஆகியோர் இறந்தனர். 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த அந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாயை ஆகஸ்ட் மாதம் படக்குழு சார்பில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் பெப்ஸி தலைவர் ஆர்கே செல்வமணி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் அளித்தனர். அப்போது கமல்ஹாசன் பேசுகையில் இனி இது போல் நடக்காதவாறு பார்த்துக் கொள்வோம் என்றார்.
நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு படப்பிடிப்பு விபத்து நேற்று நடந்த 'சர்தார் 2' படப்பிடிப்பில் நடைபெற்றுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்புதான் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தார்கள். 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை என்பவர் பலத்த காயமடைந்து அவரை உடனடியாக மருத்துமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி இரவு அவர் மரணம் அடைந்துள்ளார். அதற்கான ஆழ்ந்த இரங்கலை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருந்தாலும் மீண்டும் இப்படி ஒரு விபத்து நடந்திருப்பது குறித்து பாதுகாப்பு உபகரணங்கள் பற்றியும் கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இது குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். 'சர்தார் 2' படக்குழு பாதிக்கப்பட்டவருக்கு என்ன செய்யப் போகிறது என்றும் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.