உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா |

‛அறிந்தும் அறியாமலும், பட்டியல்' உள்ளிட்ட படங்களின் மூலம் இயக்குனராக முன்னேறிய விஷ்ணுவர்தன், அஜித்தை வைத்து இயக்கிய ‛பில்லா' படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அதன்பிறகு மீண்டும் அவரை வைத்து ‛ஆரம்பம்' என்கிற வெற்றி படத்தையும் கொடுத்தார். அதை தொடர்ந்து மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியாமல் தடுமாறி வரும் விஷ்ணுவர்தன் தற்போது நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‛நேசிப்பாயா' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இன்னொரு பக்கம் ஏற்கனவே ஹிந்தியில் படம் இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் அடுத்ததாக சல்மான்கானை வைத்து படம் இயக்கப் போகிறார் என்றும் கரன் ஜோஹரின் நிறுவனத்தில் ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகி வந்தன. இது பற்றி தற்போது மனம் திறந்துள்ள இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறும்போது, “இப்படி வெளியான இரண்டு செய்திகளுமே உண்மைதான். ஆனால் என்னை பொருத்தவரை இந்த படங்கள் துவங்கி படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து ரிலீஸுக்கு வரும்போது தான் அதை ரியாலிட்டியாக நம்ப முடியும். இப்போதைக்கு நேசிப்பாயா படம் தான் ரியாலிட்டி” என்று கூறியுள்ளார்.