‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் சமீபத்தில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகள் சவுந்தர்யா, அவரது கணவர் ஆகியோருடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வின்போது உற்சாக மிகுதியால் ரஜினிகாந்த் கூட்டத்திற்கு நடுவே சில நொடிகள் நடனமாடினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
பலரும் ரஜினிகாந்தின் இந்த உற்சாக நடனத்தை பாராட்டினாலும் இன்னும் சிலர் ரஜினிகாந்த் இப்படி ஒரு திருமண நிகழ்வில் ஆட வேண்டுமா என்கிற ரீதியில் விமர்சனமும் செய்திருந்தனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “இந்த திருமணம் ஆனந்த் அம்பானி வீட்டில் நடைபெறும் கடைசி திருமணம். அதனால் இதை மகிழ்ச்சியாக கொண்டாட முடிவு செய்தேன். மேலும் இது எனக்கு ஒரு மறக்க முடியாத தருணம்” என்று கூறியுள்ளார்.