சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'நேசிப்பாயா'. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் நடிகை அதிதி ஷங்கர் பேசுகையில் “இந்தப் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்தேன். இன்னும் பத்து நாட்களில் வெளியாக இருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் விஷ்ணுவர்தனுக்காகதான் கதை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். அவரும் என் மேல் முழு நம்பிக்கை வைத்தார். 'விருமன்' படத்தின் போது முழுக்கதையும் எனக்கு கொடுத்தார்கள். விஷ்ணு சார் எனக்கு இரண்டு முறை கதை சொன்னார். பின்பு, ஷூட் சென்று விட்டோம். ஆன் தி ஸ்பாட்டில்தான் எனக்கு வசனம், காட்சி சொல்வார் விஷ்ணு. நிறைய கற்றுக் கொண்டேன். ஆகாஷின் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். என் முதல் விருது சிவகார்த்திகேயன் கையால்தான் வாங்கினேன். இரண்டாவது படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். இந்த விழாவிற்கு அவர் வந்திருப்பது மகிழ்ச்சி. படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம்” என்றார்.




