பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படம் வருகிற 26ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் தனுஷின் கெட்டப்பை பார்த்து அவர் வட சென்னை கேங்ஸ்டராக நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது இந்த படத்தில் தனுஷ் ஒரு போலீஸ் இன்பார்மராக நடித்திருப்பதாக கூறுகிறார்கள். இது படத்தில் சஸ்பென்சாக அமைந்துள்ளதாம். வில்லன் ஏரியாவில் தனது சகோதரர்களுடன் உணவகம் நடத்தி வரும் தனுசுக்கும் வில்லன் கும்பலைச் சார்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்துதான் தனுஷ் போலீஸ் இன்பார்மர் என்கிற சஸ்பென்ஸ் உடைகிறதாம். அந்த வகையில் வில்லன் ஏரியாவுக்குள் வந்து தனுஷ் ஹோட்டல் நடத்தி அங்கு நடக்கும் பின்னணி ரகசியத்தை உடைத்தெரியும் கதையில் இந்த ராயன் படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.