வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரண். தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறர். இந்தப் படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சிவராஜ்குமார் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ரஜினியின் 'ஜெயிலர், தனுஷின் 'கேப்டன் மில்லர் படங்களின் மூலம் சிவராஜ்குமார் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அடுத்து அவர் தெலுங்கில் நடிகராக அறிமுகமாகிறார். சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை படக்குழு அறிவித்துள்ளது. இந்த செய்தி ராம்சரண் மற்றும் சிவராஜ் குமார் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு ஸ்டார்களையும் ஒன்றாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.