செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் | காந்தாரா 2ம் பாகத்தை கேரளாவில் வெளியிடும் பிரித்விராஜ் | லோகா படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆனது ஏன் ? ; இயக்குனர் பஷில் ஜோசப் | என்னை முதலில் ஆடிசன் செய்தது மம்முட்டி தான் ; மாளவிகா மோகனன் | மஞ்சு வாரியர் பட இயக்குனர் மும்பை விமான நிலையத்தில் கைது | அடுத்தடுத்து வெளியாகும் ‛இட்லி கடை' பட நடிகர்களின் கேரக்டர் போஸ்டர் : செப்., 14ல் இசை வெளியீடு | காந்தாரா சாப்டர் 1 படத்தின் தமிழக தியேட்டர் உரிமம் இத்தனை கோடியா? |
'வருஷமெல்லாம் வசந்தம்' படத்தை இயக்கிய ரவி ஷங்கர்(63), சென்னையில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றியவர் ரவி ஷங்கர். சரத்குமார் நடித்த சூர்ய வம்சம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதோடு, அந்த படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலான 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' என்ற பாடலையும் எழுதினார். பின்னர் மனோஜ் பாரதிராஜா நடிப்பில் வெளியான 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களையும் எழுதி இருந்தார். குறிப்பாக இதில் இடம் பெற்ற 'எங்கே அந்த வெண்ணிலா?' என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது.
இந்த படத்திற்கு பின் ரவி ஷங்கர் வேறு படங்கள் எதுவும் இயக்கவில்லை. திருமணமே செய்து கொள்ளாமல் சென்னை கே கே நகரில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு இவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனிமை மற்றும் பட வாய்ப்பு இல்லாமல் போனது என அவர் மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.