பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல இந்திய தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் மருந்தக துறையை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் வீரேன் - ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்க்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.
கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரில் நடந்த கொண்டாட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள், தொழில் அதிபர்கள், ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து முன்னணி திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது. இதில் பாலிவுட் திரையுலகமே கலந்து கொண்டது. தமிழகத்தில் இருந்து ரஜினிகாந்தும், ஏ.ஆர்.ரஹ்மானும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தவிர நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர், மும்பையில் இருந்தபடி சூர்யா - ஜோதிகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, மகள் சவுந்தர்யா, மருமகன் விஷாகன், மற்றும் பேரனுடன் பட்டு வேட்டி சட்டை அணிந்து தமிழ் பாரம்பரிய முறைப்படி கலந்து கொண்டார். திருமண விழாவில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்கள் பலர் நடனமாடினர். யாரும் எதிர்பாராத வகையில் ரஜினிகாந்தும் நடனமாடினார். அவருடன் மணமகன் ஆனந்த் அம்பானி மற்றும் அம்பானி குடும்பத்தினர் ஆடினர். நடிகர்கள் அனில் கபூர், ரன்வீர் சிங் ஆகியோரும் இணைந்து நடனமாடினர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.