தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

மார்க் ஆண்டனி, ரத்னம் படங்களை அடுத்து துப்பறிவாளன்- 2 படத்தை இயக்கி, நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகர் விஷால். இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்து கிடப்பில் கிடந்த மத கஜ ராஜா என்ற படம் திரைக்கு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஷாலுடன் அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், சடகோபன் ரமேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்க, விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார். நிதி நெருக்கடி காரணமாக இப்படம் திரைக்கு வராமல் கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் சுந்தர். சி இயக்கி வெளியான அரண்மனை 4 படம் திரைக்கு வந்து வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்த மத கஜ ராஜா படத்தை வெளியிடும் வேலைகள் நடைபெற்று வருகிறதாம். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாக வாய்ப்புள்ளது.