இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
பா ரஞ்சித் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தங்கலான்'. இப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியானது.
சுதந்திர காலத்துக்கு முந்தைய படம், கேஜிஎப் என அழைக்கப்படும் கோலார் தங்க வயல் சுரங்கம் உருவாகும் ஆரம்ப கட்டம் என்பது மட்டும் டிரைலரைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. அங்குள்ள பூர்வகுடிகளுக்கும், அவர்களை அடிமைப்படுத்தி தங்கத்தைத் தோண்டி எடுக்க முயலும் ஆங்கிலேயே அதிகாரிக்கும் இடையில் நடக்கும் போராட்டம்தான் படத்தின் கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.
அடையாளமே தெரியாத அளவிற்கான தோற்ற மாற்றத்தில் விக்ரம் உள்ளார். முன் தலையில் முடியில்லாமல், பின் தலையில் சடை விழுந்த நீளமான முடி, இடுப்பில் ஒரே ஒரு சிறிய துண்டு, கையில் நீளமான கம்பு என வழக்கம் போல அவரது நடிப்பில் மிரட்டுகிறார். விக்ரமின் மனைவியாக (?) பார்வதியா அது என அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார். சூனியப் பெண்ணாக மாறுபட்ட தோற்றத்தில் மாளவிகா மோகனன் உள்ளார்.
இரண்டு நிமிடம் ஓடும் டிரைலரில் சண்டைக் காட்சிகள் மட்டுமே அதிகம் உள்ளது. இருட்டான காட்சிகள், மிக மோசமான விஎப்எக்ஸ், குறிப்பாக அந்த கரும்புலி என அவசரத்தில் உருவாக்கப்பட்டது போல இருக்கிறது. 'கன்டன்ட்' ஆக படத்தில் என்ன இருக்கப் போகிறது என்பதை டிரைலர் உணர்த்தவில்லை. நாமாகவே சிலவற்றை யூகிக்க மட்டுமே வைத்திருக்கிறார்கள்.
மேக்கப்மேன், காஸ்டியுமர், ஆர்ட் டைரக்டர் ஆகியோருக்கு படத்தில் அதிக வேலை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.
ஹாலிவுட் படமான 'அப்போகலிப்டோ', பாலா இயக்கத்தில் வெளிவந்த 'பரதேசி' ஆகிய படங்களின் சாயல் டிரைலர் முழுவதும் தெரிகிறது.
விக்ரம், பார்வதி, மாளவிகா ஆகியோரின் நடிப்பு படம் வெளிவந்த பின் பேசப்படலாம். படமாக எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்வியை ரஞ்சித் முன் வைக்கிறது இந்த டிரைலர். படம் வரும் வரை காத்திருந்தால் மட்டுமே டிரைலரைப் பார்த்து எழும் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.