பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கின்றார். இப்படத்தை கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்திற்கு 'இளையராஜா' என தலைப்பு வைத்துள்ளனர்.
அக்டோபர் மாதத்தில் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக நீரவ் ஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் கலை இயக்குநராக முத்துராஜ் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.