உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் |

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தன்யா, 'பலே பாண்டியா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், அகிலன் உள்பட பல படங்களில் நடித்தார். அவர் முதன் முறையாக சோலோ ஹீரோயினாக நடிக்கும் படம் 'றெக்கை முளைத்தேன்'. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவாரவி, மீரா கிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் தயாரித்து, இயக்குகிறார். பின்னணி இசையை தரண்குமார் அமைக்க, பாடல்களுக்கு தீசன் இசையமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதுகுறித்து எஸ்.ஆர்.பிரபாகரன் கூறும்போது “இது நான் சொந்த நிறுவனம் துவங்கி தயாரிக்கும் முதல் திரைப்படம். எனது முதல் தயாரிப்பு என்பதால் நான் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறேன். படம் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்களுக்கானது. படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்” என்றார்.