ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தெலங்கானாவை சேர்ந்து பிரபல யு-டியூப்பரான பிரனீத் ஹனுமந்து என்பவர் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளிக்கும் போது அதில் ஒரு தந்தை - மகள் குறித்த வீடியோ ஒன்றை குறிப்பிட்டு அவர்களது உறவை கொச்சைப்படுத்தும் விதமாக அநாகரிகமான கருத்துக்களை பேசியிருந்தார். அவரிடம் பேட்டி கண்டவரும் அதை நகைச்சுவை போல கருதி சிரித்தார்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் இந்த வீடியோவை பார்த்து கோபமாகி உடனடியாக இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிரணீத் ஹனுமந்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடியாக எப்ஐஆரும் போடப்பட்டது.
அதேசமயம் நடிகர்கள் சுதீர் பாபு, வலிமை படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் தாங்களும் பிரணீத் ஹனுமந்துவுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதில் நடிகர் கார்த்திகேயா கூறும்போது, எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் நல்ல கருத்துக்களும் நகைச்சுவைகளும் மட்டுமே பாராட்டப்படும். ஆனால் எல்லாத்திற்குமே ஒரு எல்லை உண்டு. பிரணீத் அந்த எல்லையை மீறிவிட்டார் இதுபோன்ற கருத்துக்கள் நம் சமூகத்தை பின்னோக்கி மட்டுமே அழைத்துச் செல்லும் என்று கூறியிருந்தார்.
ஆனால் இதே கார்த்திகேயா இதற்கு முன்பாக இந்த பிரணீத் ஹனுமந்துவின் பேட்டியில் கலந்து கொண்டு பேசும்போது இதே ரீதியில் நகைச்சுவை என்கிற பெயரில் சில விஷயங்களை பேசி இருந்தார் என்றும் அப்படிப்பட்டவருக்கு இப்போது மட்டும் எப்படி சமூக பொறுப்பு வந்தது என்றும் நெட்டிசன்கள் பலரும் இவரது கருத்து குறித்து விமர்சித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார் கார்த்திகேயா.
“நான் என்னுடைய படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக எல்லா சேனல்களிலும் கலந்து கொள்வது போலத்தான் தான் பிரணீத் ஹனுமந்துவின் வித்தியாச கருத்தம்சம் கொண்ட பேட்டியிலும் பங்கேற்றேன். ஆனால் இது போன்ற விஷயங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற எந்த உள்நோக்கமும் இல்லை. அதேநேரம் அதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் நானும் பங்கேற்று இருக்கிறேன் என்பதற்காக வருத்தப்படுகிறேன். இனி இதுபோன்ற கருத்தாக்கம் கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது கவனமாக இருப்பேன்” என்று கூறியுள்ளார்.