பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

நடிகை ராஷ்மிகா மற்ற முன்னணி நடிகைகளிடமிருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டு தெரிபவர். குறிப்பாக பொது இடங்களில் அல்லது சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் தன்னை எந்த இடத்தில் சந்திக்க முற்பட்டாலும் முகம் சுளிக்காது அவர்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்வார்.
சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி அவர்களது கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்பவர். கடந்த சில நாட்களாக ராஷ்மிகா, விமான நிலையத்திற்கு வரும்போதெல்லாம் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வந்திருக்கிறார். அப்படி ஒரு புகைப்படத்தை சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்திலும் வெளியிட்டிருந்தார் ராஷ்மிகா. அதேசமயம் ரசிகர்கள் தனது முகத்தை பார்க்கக் கூடாது என்று தவிர்ப்பதற்காகவே அவர் இவ்வாறு வருகிறாரோ என்று ரசிகர் ஒருவர் இதற்கு கமெண்ட் தெரிவித்து இருந்தார்.
ரசிகர்களின் ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகளில் இந்த ஒரு கமெண்ட் ராஷ்மிகாவின் பார்வையில் எப்படியோ பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு பதிலளிக்கும் விதமாக, “நிச்சயமாக அப்படியெல்லாம் எதுவும் இல்லை.. தொடர் படப்பிடிப்புகளால் சரும பாதிப்புகள் ஏற்படுகின்றன. படப்பிடிப்பு இல்லாத நேரத்திலாவது சருமத்திற்கு சற்று ஓய்வு கிடைக்கட்டுமே என்று தான் மாஸ்க் அணிந்து வருகிறேன்” என்று பதிலளித்து அவரை சமாதானப்படுத்தியுள்ளார் ராஷ்மிகா.




