பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் |
2024ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 115 படங்கள் வந்தாலும், நான்கே நான்கு படங்கள்தான் முற்றிலும் லாபகரமான படங்களாக அமைந்தது. அதிலும் இரண்டு படங்கள் மட்டுமே 100 கோடி வசூலைக் குவித்தது.
அடுத்த ஆறு மாத காலங்களில் ஹீரோக்களுக்கு மட்டுமே 100 கோடிக்கும் அதிகமான சம்பளத்தைக் கொடுத்த படங்கள் வர உள்ளன. 'இந்தியன் 2, தி கோட், வேட்டையன், விடாமுயற்சி' என 100 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன. அவர்களுடைய சம்பளம் போக மீதி எத்தனை 100 கோடிகளில் படங்கள் தயாராகி இருக்கும் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்படியான பெரிய வெளியீடுகளில் முதலாவதாக 'இந்தியன் 2' படம் இந்த வாரம் ஜுலை 12ம் தேதி வெளியாக உள்ளது. பெரும் நட்சத்திரக் கூட்டத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் மட்டுமே சுமார் 800 கோடி என்கிறார்கள்.
ஷங்கரின் பிரம்மாண்டம், அனிருத்தின் அதிரடியான இசை, கமல்ஹாசன் அனுபவ நடிப்பு என 28 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படத்தின் இரண்டாவது படமாக வருகிறது 'இந்தியன் 2'. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இந்தப் படம் பூர்த்தி செய்யும் என்பது திரையுலகினரின் எதிர்பார்ப்பு. இன்னும் இரண்டு நாட்களில் அதற்கான விடை தெரிந்துவிடும்.